செய்திகள்
கோப்பு படம்

மத்திய பிரதேசத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை நாளை பள்ளிகள் திறப்பு

Published On 2021-09-19 14:15 GMT   |   Update On 2021-09-19 15:04 GMT
50 சதவீத மாணவர்களுடன் வகுப்புகள் நடைபெறும் என்றும் முகக்கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
போபால்:

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 1-ந் தேதி 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. மத்திய பிரதேசத்தில் 6 முதல் 12 வகுப்பு வரையிலான 50 சதவீத மாணவர்களுடன் வகுப்புகள் துவங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் மத்திய பிரதேசத்தில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை(செப்டம்பர் 20) பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதனையடுத்து பள்ளிகளில் மாநில அரசு பள்ளிகளில் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.



அதன்படி 50 சதவீத மாணவர்களுடன் வகுப்புகள் நடைபெறும் என்றும் முகக்கவசம், கைகளை அடிக்கடி சுத்தம் செய்தல், சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் சுமார் 18 மாதங்களுக்குப் பிறகு, நாளை முதல் முறையாக, 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News