செய்திகள்
அமைச்சர் செங்கோட்டையன்

எடப்பாடி பழனிசாமிதான் மீண்டும் முதல்-அமைச்சர் ஆவார்- அமைச்சர் பேட்டி

Published On 2020-10-18 02:03 GMT   |   Update On 2020-10-18 02:03 GMT
2021 சட்டசபை தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும் என்றும், எடப்பாடி பழனிசாமி தான் மீண்டும் முதல்-அமைச்சர் ஆவார் என்றும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
கடத்தூர்:

அ.தி.மு.க.வின் 49-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி ஈரோடு மாவட்டம் கோபியில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது:-

எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்கி 49 ஆண்டுகள் ஆகிறது. அவரது மறைவுக்கு பின்பு ஜெயலலிதா தனது ஆட்சியில் இந்தியாவே வியக்கத்தக்க அளவுக்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார். அதே போல் தற்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது. பல்வேறு திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த கட்சியையும், ஆட்சியையும் யாராலும் அசைக்க முடியாது. முதல்- அமைச்சர், துணை முதல்- அமைச்சர் இருவரும் இரட்டைக்குழல் துப்பாக்கியாக செயல்பட்டு வருகிறார்கள்.

இவ்வாறு இவர் பேசினார்.

பின்னர் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-

அ.தி.மு.க. 49-வது ஆண்டு விழா தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. எம்.ஜி.ஆர். இருந்த வரை அவர் தான் தமிழகத்தின் முதல்-அமைச்சராக விளங்கினார். ஏழை, எளிய மக்களுக்காக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றினார். வருகிற 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று அ.தி.மு.க. ஆட்சி தான் தொடரும். எடப்பாடி பழனிசாமி தான் முதல்-அமைச்சர் ஆவார். நீட் தேர்வில் தேனிமாவட்டம் பெரியகுளம் சில்வார்பட்டியை சேர்ந்த அரசு பள்ளி மாணவர் ஜீவித்குமார் 664 மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளார். இது நாடே பாராட்டக்கூடிய விஷயமாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News