செய்திகள்
தமிழக அரசு ஆலோசகர் சண்முகம்

தமிழக அரசு ஆலோசகர் சண்முகம் ராஜினாமா

Published On 2021-05-04 02:36 GMT   |   Update On 2021-05-04 02:36 GMT
தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சனுக்கு கே.சண்முகம் நேற்று பதவி விலகல் கடிதம் அனுப்பினார்.
சென்னை:

தமிழக அரசின் நிதித்துறை செயலாளராக நீண்ட நாட்கள் பணியாற்றியவர் கே.சண்முகம். இந்த நிலையில் கடந்த அ.தி.மு.க. அரசு ஆட்சியின்போது அவர் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

அவர் தலைமைச் செயலாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற பிறகும் 2 முறை அவருக்கு அரசு பதவி நீட்டிப்பு வழங்கி உத்தரவிட்டது. அதன் பின்னர் அவர் ஓய்வு பெற அனுமதிக்கப்பட்டார்.

என்றாலும், அரசு ஆலோசகராக கே.சண்முகத்தை அ.தி.மு.க. அரசு மீண்டும் நியமித்தது. அவர் அந்தப் பதவியில் நீடித்த நிலையில், சட்டசபை தேர்தல் நடைபெற்று அ.தி.மு.க. தோல்வி அடைந்தது.

இந்த நிலையில் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சனுக்கு கே.சண்முகம் நேற்று பதவி விலகல் கடிதம் அனுப்பினார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

கடந்த ஜனவரி 31-ந் தேதி நான் தமிழ்நாடு அரசு ஆலோசகராக ஓராண்டுக்கு நியமிக்கப்பட்டேன். சில தனிப்பட்ட காரணங்களுக்காக அந்தப் பதவியில் இருந்து நான் விலக முடிவெடுத்துள்ளேன்.

அதற்கான ராஜினாமா கடிதத்தை உங்களுக்கு அனுப்பி இருக்கிறேன். அதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News