செய்திகள்
நீரஜ் சோப்ரா

கேல் ரத்னா விருதுக்கு 11 பேரின் பெயர்கள் பரிந்துரை

Published On 2021-10-27 12:35 GMT   |   Update On 2021-10-27 12:35 GMT
விளையாட்டு விருதுகளுக்கு அந்தந்த விளையாட்டு அமைப்புகள் சார்பில், தகுதிவாய்ந்த வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்படுகின்றன.
புதுடெல்லி:

தேசிய அளவில் விளையாட்டுத் துறைகளில் சிறந்த சாதனைகளைப் படைக்கும் வீரர்-வீராங்கனைகளுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் மத்திய அரசால் மிக உயரிய விருதான கேல் ரத்னா விருது வழங்கப்படுகிறது. இதேபோல் அர்ஜுனா விருது, துரோணாச்சாரியா விருது, தயான்சந்த் விருது ஆகிய விருதுகளும் வழங்கப்படுகின்றன. 

இந்த ஆண்டுக்கான விளையாட்டு விருதுகளுக்கு அந்தந்த விளையாட்டு அமைப்புகள் சார்பில், தகுதிவாய்ந்த  வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்படுகின்றன.

அவ்வகையில், டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, வெள்ளிப்பதக்கம் வன்ற மல்யுத்த வீரர் ரவி தாஹியா, குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா, கால்பந்து வீரர் சுனில்  சேத்ரி, கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ், ஹாக்கி வீரர் ஸ்ரீஜேஷ், பாரா-தடகளப் பிரிவில் துப்பாக்கி சூடுதல் வீராங்கனை அவனி லெகாரா உள்ளிட்ட 5 பேர் என மொத்தம் 11 பேரின் பெயர்கள்,  2021ம் ஆண்டிற்கான கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. 

கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் உள்ளிட்ட 35 பேர் அர்ஜூனா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.
Tags:    

Similar News