செய்திகள்
சென்னையில் இன்று காலை மழை பெய்தபோது எடுத்த படம்.

இன்னும் 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்- வானிலை மையம் தகவல்

Published On 2019-10-20 14:28 GMT   |   Update On 2019-10-20 14:28 GMT
காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால் இன்னும் 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 16-ந் தேதி தொடங்கியது. அன்று முதல் 4 நாட்களாக தினமும் மழை பெய்து வருகிறது. சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், திருவண்ணா மலை, விழுப்புரம், கன்னியாகுமரி, நீலகிரி உள்பட 15 மாவட்டங்களில் ஆங்காங்கே கனமழையும் பெய்து வருகிறது. இடியுடன் கூடிய மழையும் பெய்கிறது.

இதுகுறித்து வானிலை மைய அதிகாரி புவியரசன் கூறியதாவது:-

வடகிழக்கு பருவமழை சரியான சமயத்தில் தொடங்கியதால் தொடர்ந்து மழை பெய்கிறது. வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 3 நாட்களாக நல்ல மழை பெய்தது. தற்போது தென்மேற்கு வங்க கடலில் கன்னியாகுமரி மற்றும் இலங்கை அருகே வழிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகி உள்ளதால் இன்னும் 3 நாட்களுக்கு தமிழ்நாடு புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யும். ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும். கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும்.

சென்னை மற்றும் புறநகரில் அடுத்த 4 நாட் களுக்கு மிதமான மழை பெய்யும். குமரி கடல், மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசுவதால் மீனவர்கள் 2 நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறார்கள். 

கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று கனமழை பெய்தது போல், சென்னையிலும் நேற்று இரவு பலத்த மழை பெய்தது.இன்று காலையிலும் எழும்பூர், சென்ட்ரல், பாரிமுனை, கோயம்பேடு, வண்ணாரப்பேட்டை, அம்பத்தூர், ஆவடி, திரு வொற்றியூர், மணலி, செங்குன்றம், பல்லாவரம், தாம்பரம், கூடுவாஞ்சேரி, துரைப்பாக்கம், சோழிங்க நல்லூர், மீனம்பாக்கம், அடையார், திருவான்மியூர் பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) வருமாறு:-

புவனகிரி-9, நாகர் கோவில்-8, பெருஞ்சாணி, கன்னிமார், புத்தன் அணை-7, தக்கலை, சேத்தியாதோப்பு, பூதப்பாண்டி, குன்னூர்-6, கன்னியாகுமார், பேச்சிப் பாறை-5.

மயிலாடி, திருச்செந்தூர், பாபநாதம், ஸ்ரீமுஷ்ணம், கோதகிரி, தூத்துக்குடி, மேட்டுப்பாளையம், மண மேல்குடி-4, இரணியல், பரங்கிப்பேட்டை, ராதாபுரம், சிதம்பரம், பாளையங்கோட்டை, ஆடு துறை, சீர்காழி, ஆணைக் காரன் சத்திரம், கொடைக்கானல்-3. திருமானூர், ஸ்ரீபெரும்புதூர், சாத்தான்குளம், பூண்டி, காரைக்கால், வேதாரண்யம், பூந்தமல்லி, ஜெயங்கொண்டம், குளச்சல், கடலூர், நாகை, செய்ïர், தாம்பரம், ராமநாதபுரம், சின்னகல்லார், குடியாத்தம், விழுப்புரம்-2.

குழித்துறை, விருத்தாசலம், தாமரைப்பாக்கம், திருவையாறு, சோவரம், திருத்தணி, பண்ருட்டி, நடுவட்டம், திருப்பத்தூர், செங்கல்பட்டு, திருக்காட்டுப்பள்ளி, திரு வள்ளூர், சோழிங்கநல்லூர், பொன்னேரி, புதுச்சேரி, தரங்கம்பாடி, மயிலாடுதுறை, செங்கம், சென்னை-1. காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால் 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Tags:    

Similar News