ஆன்மிகம்
காணிப்பாக்கம் விநாயகர் கோவிலில் சிறப்பு யாகம்

காணிப்பாக்கம் விநாயகர் கோவிலில் சிறப்பு யாகம்

Published On 2021-05-19 04:53 GMT   |   Update On 2021-05-19 04:53 GMT
சித்தூர் காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோவிலில் நவக்கிரக சகித மிரித்தி ஜெய ஹோமம் நடந்தது. வேத பண்டிதர்கள் மந்திரங்கள் முழங்க ஹோமம் நடத்தினர்.
சித்தூர் காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோவிலில் கொரோனா வைரஸ் தொற்றை ஒழிக்க நவக்கிரக சகித மிரித்தி ஜெய ஹோமம் நடந்தது. வேத பண்டிதர்கள் மந்திரங்கள் முழங்க ஹோமம் நடத்தினர்.

இதுகுறித்து கோவில் செயல் அலுவலர் வெங்கடேஷ் கூறுகையில் இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இருப்பினும் கொரோனா அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஆகவே மாநில இந்து அறநிலையத்துறை சார்பில் காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோவிலில் கொரோனா வைரஸ் தொற்றை ஒழிக்க நவகிரக சகித மகா மிரித்தி ஜெய ஹோமம் நடத்தப்பட்டது என்றார்.

இதில் கோவில் இணை செயல் அலுவலர்கள் வித்யாசாகர், கோதண்டபாணி, பிரதான அர்ச்சகர் சோமசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News