தொழில்நுட்பம்
சியோமி Mi 10

இந்தியாவில் சியோமி Mi 10 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்

Published On 2020-05-08 12:01 GMT   |   Update On 2020-05-08 12:01 GMT
சியோமி நிறுவனத்தின் Mi 10 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை விவரங்களை பார்ப்போம்.



சியோமி நிறுவனம் ஏற்கவனே அறிவித்தப்படி இந்தியாவில் Mi 10 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் வளைந்த AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர், 5ஜி, ஸ்னாப்டிராகன் எக்ஸ்55 மோடெம், லிக்விட் கூலிங் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 10 மற்றும் MIUI 11 இயங்குதளம் கொண்டிருக்கும் சியோமி Mi10 5ஜி ஸ்மாரட்போனில் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 108 எம்பி சாம்சங் சென்சார், 13 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில், 2 எம்பி டெப்த் மற்றும் 2 எம்பி மேக்ரோ சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளன.



சியோமி Mi 10 5ஜி சிறப்பம்சங்கள்:

- 6.67 இன்ச் 2340x1080 பிக்சல் FHD+ AMOLED 19.5:9 HDR10 + 90Hz டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
- ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர்
- அட்ரினோ 650 GPU
- 8 ஜி.பி. LPPDDR5 ரேம், 128 ஜி.பி. / 256 ஜி.பி. UFS 3.0 மெமரி
- டூயல் சிம்
- MIUI 11 சார்ந்த ஆண்ட்ராய்டு 10
- 108 எம்.பி. பிரைமரி கேமரா, 0.8μm, f/1.69, OIS, 8P லென்ஸ் எல்.இ.டி. ஃபிளாஷ்
- 13 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்
- 2 எம்.பி. டெப்த் சென்சார்
- 2 எம்பி மேக்ரோ லென்ஸ்
- 20 எம்.பி. செல்ஃபி கேமரா
- இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- யு.எஸ்.பி. டைப்-சி
- 5ஜி SA/NSA டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1
- 4780 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 30 வாட் QC 4+ / PD3.0 வயர் மற்றும் வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்
- 10 வாட் வயர்லெஸ் ரிவர்ஸ் சார்ஜிங்

சியோமி Mi 10 5ஜி ஸ்மார்ட்போன் கோரல் கிரீன் மற்றும் டுவிலைட் கிரே நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன்  8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 49,999 என்றும் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 54,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை மே 18 ஆம் தேதி துவங்குகிறது.
Tags:    

Similar News