உள்ளூர் செய்திகள்
சி.சி.டி.வி. காமிராவில் பதிவான கொள்ளையர்கள் உருவம்.

கோவையில் தொழிற்சாலையில் 200 கிலோ இரும்பு திருட்டு- கண்காணிப்பு காமிரா மூலம் 3 பேர் சிக்கினர்

Published On 2022-01-12 10:33 GMT   |   Update On 2022-01-12 10:33 GMT
கோவை தொழிற்சாலையில் இரும்பு திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
காரமடை:

கோவை காரமடை தொட்டிப்பாளையம்  பகுதியை சேர்ந்தவர் குமாரவேல் (48). இவர் சென்னிவீரம்பாளையத்தில் இரும்பு தொழிற்சாலை வைத்து நடத்தி வருகிறார்.

சம்பவத்தன்று இவர் வேலையை முடித்து விட்டு தொழிற்சாலையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். பின்னர் மறுநாள் காலை வழக்கம்போல தொழிற்சாலைக்கு வந்தார்.

அப்போது பின்பக்கம் மரவேலி உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது அங்கு  இருந்த 200 கிலோ இரும்பு பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

இதையடுத்து குமாரவேல் காரமடை போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு வந்து அங்கு பதிவாகியிருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். பின்னர் தொழிற்சாலையில் பொருத்தப்பட்டு இருந்த  சி.சி.டி.வி காமிராக்களை ஆய்வு செய்தனர். 

அப்போது 3 வாலிபர்கள் அங்கு புகுந்து திருடுவது பதிவாகி இருந்தது.அவர்களின்  உருவ படங்களை வைத்து போலீசார் கொள்ளையர்களை தேடி வந்தனர்.இந்த நிலையில் சந்தேகத்தின் பேரில் போலீசார் 3 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். 

விசாரணையில்  அவர்கள் காரமடை திம்மம்பாளையம் பகுதியை  சேர்ந்த ஆனந்த்பாபு (40), ரஞ்ஜித் (19) மற்றும் வீரப்பாண்டி பகுதியை சேர்ந்த பாலமுருகன் (36) ஆகியோர் என்பதும், அவர்கள் தொழிற்சாலையில் புகுந்து 200 கிலோ இரும்பு பொருட்களை திருடியதும் தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News