செய்திகள்

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆண்டர்னுக்கு இன்று பெண் குழந்தை பிறந்தது

Published On 2018-06-21 07:28 GMT   |   Update On 2018-06-21 07:28 GMT
நியூசிலாந்து நாட்டின் பிரதமராக பதவி வகித்து வரும் ஜெசிந்தா ஆண்டர்னுக்கு இன்று பெண் குழந்தை பிறந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. #JacindaArdern
வெலிங்டன்:

நியூசிலாந்து நாட்டின் பிரதமராக ஜெசிந்தா ஆண்டர்சன் கடந்த ஆண்டு அக்டோபட் மாதம் பதவியேற்றார். 37 வயதில் பிரதமரான ஜெசிந்தா மிகச்சிறிய வயதில் நாட்டின் தலைவராக பொறுப்பேற்ற உலகின் முதல் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெசிந்தா நியூசிலாந்து டிவி தொகுப்பாளரான கிளார்க் கேபோர்ட் என்பவருடன் வாழ்ந்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் தான் கர்ப்பமாக இருப்பதாக ஜெசிந்தா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இந்நிலையில், நியூசிலாந்து நேரப்படி இன்று காலை 5.30 மணிக்கு ஜெசிந்தா பிரசவத்திற்காக ஆக்லாந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இன்று மாலை 4.45 மணிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. அதனை ஜெசிந்தா அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். கணவர் மற்றும் பிறந்த குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள ஜெசிந்தா, தாயும் சேயும் நலமாக இருப்பதாக கூறியுள்ளார். மேலும்,  பெற்றோராக மாறியது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இருப்பினும் என் மீது அன்பு வைத்து எனக்கு ஆசி வழங்கிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி எனக்குறிப்பிட்டிருந்தார்.

ஜெசிந்தா பதவியில் இருக்கும் போது குழந்தை பெற்றெடுத்த உலகின் இரண்டாவது பெண் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. #JacindaArdern
Tags:    

Similar News