உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

மத்திய சிறை சிறப்பு முகாமில் காவலரிடம் தகராறில் ஈடுபட்ட கைதி மீது வழக்கு

Published On 2022-01-29 07:20 GMT   |   Update On 2022-01-29 07:20 GMT
மத்திய சிறை சிறப்பு முகாமில் காவலரிடம் தகராறில் ஈடுபட்ட கைதி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை
திருச்சி:

திருச்சி மத்திய சிறையில் அகதிகள் சிறப்பு முகாம்கள் அமைந்துள்ளது. இந்த முகாம்களில் வெளி நாட்டைச் சேர்ந்த கைதிகள் தங்க வைக்கப்பட்டு தண்டனை காலம் முடிந்ததும் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறார்கள். இதில் சிலோன் பகுதியைச் சேர்ந்த பாண்டியன் (40). கைதியாக இருந்து வருகிறார்.

இங்கு கியூ பிரிவு தலைமை காவலராக பணிபுரிந்து வருபவர் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சிவக்குமார் (வயது37). இவர் சம்பவத்தன்று அகதிகள் முகாமில் கணக்கெடுக்கும் பணிக்காக சென்றுள்ளார்.

அப்போது பாண்டியன் எதற்காக இங்கு வருகிறாய்?  இங்கே என்ன வேலை? என்று கேட்டு சிவகுமாரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது.

பின்னர் இதுகுறித்து தலைமை காவல் சிவக்குமார், மாநகர போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் மாநகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். கைதி, காவலரை முகாமில் அனுமதிக்காமல் தடுத்து நிறுத்திய சம்பவம் மத்திய சிறை வளாகத்தில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. 
Tags:    

Similar News