செய்திகள்
முக கவசம் அணியாத பஸ் கண்டக்டர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

வெள்ளகோவிலில் முக கவசம் அணியாத பஸ் கண்டக்டர்களுக்கு அபராதம்

Published On 2021-03-19 15:40 GMT   |   Update On 2021-03-19 15:40 GMT
வெள்ளகோவிலில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கடையில் வைத்திருந்ததற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
வெள்ளகோவில்:

நாளுக்கு நாள் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்பேரில் சுகாதாரத்துறை மற்றும் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் கதிரவன் மற்றும் நகராட்சி சுகாதார ஆய்வாளர் சரவணன் மற்றும் பணியாளர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

வெள்ளகோவில் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் சமூக இடைவெளி கடைபிடிக்காமல், முக கவசம் அணியாமல் இருந்த பொதுமக்கள் மற்றும் பஸ் நிலையத்தில் பஸ் டிரைவர், கண்டக்டர்கள் மீது அபராதம் விதித்தனர். மற்றும் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கடையில் வைத்திருந்ததற்காகவும் மொத்தம் ரூ.7,600 அபராதம் விதித்தனர்.
Tags:    

Similar News