செய்திகள்
தட்டாஞ்சாவடியில் தீபாவளி சிறப்பு அங்காடி அமைக்க பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெறுவதை காணலாம்

தீபாவளி சிறப்பங்காடி அமைக்கும் பணிகள் தீவிரம்

Published On 2021-10-20 02:52 GMT   |   Update On 2021-10-20 02:52 GMT
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு அங்காடி அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
புதுச்சேரி:

புதுவையில் தீபாவளி பண்டிகையையொட்டி ஆண்டுதோறும் பாப்ஸ்கோ நிறுவனம் சார்பில் சிறப்பு அங்காடி அமைக்கப்படுவது வழக்கம். ரோடியர் மில் திடல் அல்லது தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் இந்த சிறப்பு அங்காடி செயல்படும்.

இந்த அங்காடியில் அரிசி, பருப்பு, எண்ணெய் மற்றும் மளிகை பொருட்கள், பட்டாசுகள் விற்பனை செய்யப்படும். பாப்ஸ்கோ நிறுவனம் தொடர் நஷ்டத்தில் இயங்கியதன் காரணமாக இந்த சிறப்பு அங்காடியானது கடந்த 3 ஆண்டுகளாக நடத்தப்படவில்லை.

இந்தநிலையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் புதிய அரசு அமைந்ததை தொடர்ந்து, மீண்டும் தீபாவளி சிறப்பங்காடியை நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதற்காக ரூ.3 கோடியே 25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து சிறப்பு அங்காடி அமைப்பதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் இந்த ஆண்டு சிறப்பு அங்காடி செயல்பட உள்ளது. இதற்காக அங்கு பந்தல் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

வருகிற 24-ந்தேதி சிறப்பு அங்காடியை முதல்-அமைச்சர் ரங்கசாமி திறந்துவைக்க உள்ளார். தொடர்ந்து தீபாவளி வரை இந்த சிறப்பங்காடி செயல்பட உள்ளது.
Tags:    

Similar News