தொழில்நுட்பம்
போக்கோ

அந்த ரெட்மி ஸ்மார்ட்போன் போக்கோ எஃப்2 பெயரில் அறிமுகமாகும் என தகவல்

Published On 2020-03-27 05:21 GMT   |   Update On 2020-03-27 05:21 GMT
ரெட்மியின் புதிய கே சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் போக்கோ எஃப்2 பெயரில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகியுள்ளது.



ரெட்மி கே30 4ஜி ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு, பின் போக்கோ எக்ஸ்2 பெயரில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த வகையில் ரெட்மி கே30 ப்ரோ ஸ்மார்ட்போன் போக்கோ எஃப்2 பெயரில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய MIUI கேமரா குறியீடுகளில் இதுபற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போன் போக்கோ எஃப்2 பெயரில் அறிமுகம் செய்யப்படும் என்றும் இதில் ஃபிளாக்ஷிப் லெவல் சிறப்பம்சங்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எக்ஸ்.டி.ஏ. டெவலப்பர்கள் MIUI பீட்டா பதிப்பின் MI கேமரா செயலியிலுனுள் ரெட்மி கே30 ப்ரோ மற்றும் போக்கோ பிராண்டு வார்த்தைகள்  இடம்பெற்று இருப்பதாக தெரிவித்து இருக்கின்றனர். இதில் ரெட்மி கே30 ப்ரோ லிமின் எனும் குறியீட்டு பெயரில் உருவாகி வருவதோடு, ஷாட் ஆன் போக்கோ போன் எனும் தகவல் இடம்பெற்றுள்ளது.



போக்கோ பிராண்டிங் கொண்டிருப்பதால், ரெட்மி கே30 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் போக்கோ பிராண்டிங்கில் வெளியாகும் என்பகை உணர்த்தும் வகையில் அமைந்து இருக்கிறது.

சிறப்பம்சங்களை பொருத்தவரை ரெட்மி கே30 ப்ரோ ஸ்மார்ட்போனில் பாப் அப் செல்ஃபி கேமரா, ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர், 64 எம்.பி. குவாட் கேமரா சென்சார், 4700 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 6.67 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் ஹெச்.டி.ஆர். 10 டிஸ்பளே வழங்கப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News