ஆன்மிகம்
புன்னைநல்லூர் மாரியம்மனுக்கு நவரத்தின அலங்காரம்

தெப்ப உற்சவ விழாவையொட்டி புன்னைநல்லூர் மாரியம்மனுக்கு நவரத்தின அலங்காரம்

Published On 2020-09-21 04:50 GMT   |   Update On 2020-09-21 04:50 GMT
தஞ்சையை அடுத்த புன்னைநல்லூரில் மாரியம்மன் கோவிலில் புரட்டாசி ஞாயிற்றுக்கிழமையையொட்டி தெப்ப உற்சவ அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
தஞ்சையை அடுத்த புன்னைநல்லூரில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் ஆடி, ஆவணி, புரட்டாசி மாதங்களில் பூச்சொரிதல், தேரோட்டம், தெப்ப திருவிழா ஆகியவை நடைபெறுவது வழக்கம்.

இந்த திருவிழா நாட்களில் வெளிமாவட்டத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை தரிசித்து இரவு குடும்பத்துடன் தங்கி செல்வர். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக புரட்டாசி ஞாயிற்றுக்கிழமைகளில் நடக்க இருந்த தெப்ப உற்சவ விழா நடைபெறவில்லை. இந்தநிலையில் நேற்று புரட்டாசி ஞாயிற்றுக்கிழமையையொட்டி தெப்ப உற்சவ அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

அதனை தொடர்ந்து அம்மனுக்கு நவரத்தின அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. தெப்பம் உற்சவம் நடைபெறாததால் தெப்பத்தில் வைக்கப்படும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கோவில் உட்பிரகாரத்திலேயே உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News