உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

60 வயதுக்கு மேற்பட்டவர்கள், தடுப்பூசி போடாதவர்கள் கவனமாக இருக்க வேண்டும்

Published On 2022-01-13 10:39 GMT   |   Update On 2022-01-13 10:39 GMT
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 6 நாட்களாக கொரோனா தினசரி பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று உச்ச கட்டமாக ஒரே நாளில் மேலும் 330 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சுகாதாரத்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 6 நாட்களாக கொரோனா தினசரி பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று உச்ச கட்டமாக ஒரே நாளில் மேலும் 330 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சுகாதாரத்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
இதையடுத்து சுகாதாரதுறையினர், மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி ஆகியவை ஒன்றிணைந்து பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள எடுத்து வருகின்றனர். குறிப்பாக மாநகர் பகுதியில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.

மாவட்டம் முழுவதும் ஏற்பட்டுள்ள மொத்த பாதிப்பில் பாதிக்குபாதி மாநகர் பகுதியில் தான் ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து மாநகராட்சி சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து மாநகராட்சி நகர்நல அலுவலர் பிரகாஷ் கூறியதாவது:-

ஈரோடு மாநகர் பகுதியில் கடந்த 3 நாட்களாக கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் மாநகர் பகுதியில் 168 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று ஏற்பட்டவர்களில் 90 சதவீதம் பேருக்கு  லேசான அறிகுறியே இருந்ததால் அவர்கள் தங்களை வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். 

எண்ணிக்கை அதிகரிப்பதை கண்டு மக்கள் அச்சப்பட தேவையில்லை. மொத்த பாதிப்பில் வெறும் 10 சதவீதம் பேருக்கு மட்டுமே மருத்துவமனையில் சென்று சிகிச்சை பெற அவசியம் ஏற்படுகிறது. மீதி உள்ளவர்கள் வீடுகளில் தனிப்படுத்தி கொண்டாலே போதும். 

60 வயதுக்கு மேற்பட்டவர்கள், இணை நோய் உள்ளவர்கள், இதுவரை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் கவனமாக இருக்க வேண்டும். இவர்களுக்கு கொரோனா தொடர்பான அறிகுறிகள் இருந்தாலே சிறிதும் தாமதிக்காமல் அருகில் உள்ள மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலைய ங்களில் செ ன்று பரிசோத னை செய்து கொள்ள வேண்டும்.
 
மாநகர் பகுதியில் தடுப்பூசி போடும் பணி வேகம் எடுத்தப் பட்டுள்ளது. மாநகர் பகுதி யில் இதுவரை முதல் தவ ணை தடுப்பூசி¬ ய 91 சதவீதம் பேர் போட் டுள்ளனர். 2-ம் தவணை தடுப்பூசியை இதுவரை 64 சதவீதம் பேர் போட்டுள்ளனர். 15 வயது முதல் 18 வயது  உடைய சிறுவர்கள் 22 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கி நடந்து வருகிறது.

இதுவரை 17,000 சிறுவர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு உள்ளது. இதேப்போல் முன்களப்பணியாளர்கள் அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றினாலே போதும். அதேப்போல் இதுவரை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களும் தடுப்பூசி செலுத்தி கொள்ள முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News