செய்திகள்
கொரோனா வைரஸ்

ஒடிசாவில் துணை சிறைச்சாலையில் உள்ள 21 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி

Published On 2021-05-11 09:54 GMT   |   Update On 2021-05-11 09:54 GMT
உதாலா துணை சிறைச்சாலையில், கடந்த சனிக்கிழமையன்று சிறைக்கைதிகளுக்கு வழக்கமான மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
புவனேஸ்வர்:

இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தொற்றின் 2வது அலை கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஒடிசா மாநிலத்திலும் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு புதிதாக 9,793 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ள நிலையில், 18 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள உதாலா துணை சிறைச்சாலையில், கடந்த சனிக்கிழமையன்று சிறைக்கைதிகளுக்கு வழக்கமான மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் சிலருக்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டது.



இதையடுத்து உதாலா நகர மருத்துவமனைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, கொரோனா பரிசோதனை செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதனை தொடர்ந்து 79 சிறைக்கைதிகளுக்கு பரிசோதனை செய்ததில் 21 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து உதாலா சிறையின் நிர்வாக அதிகாரி வித்யாதர் தண்டபாத் கூறுகையில், “தொற்று பாதிக்கப்பட்ட சிறைக்கைதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான முறையான மருத்துவ சிகிச்சை அளித்து வருகிறோம். தேவைப்பட்டால் கொரோனா பராமரிப்பு மையத்திற்கு அனுப்பிவைப்போம். சிறைச்சாலை வளாகம் முழுவதும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News