செய்திகள்
டெங்கு கொசு.

திருக்காடுதுறை பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள்

Published On 2019-11-04 13:34 GMT   |   Update On 2019-11-04 13:34 GMT
திருக்காடுதுறை பகுதிகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் துப்புரவுப் பணியாளர்கள் டெங்கு தடுப்பு மருந்து தெளித்தல் மற்றும் கொசு புகை மருந்துகளை அடித்தனர்.
வேலாயுதம்பாளையம்:

கரூர் மாவட்டம் திருக்காடுதுறை பகுதிகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் ஊராட்சி செயலர் ரமேஷ் தலைமையில் துப்புரவுப் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் கலந்து கொண்டு டெங்கு வராமல் தடுக்க, டெங்கு தடுப்பு மருந்து தெளித்தல் மற்றும் கொசு புகை மருந்துகளை அடித்தனர்.

வீட்டைசுற்றிலும் உள்ள உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள், தேங்காய் சிரட்டைகள், தேவையற்ற பொருட்கள், டீ கப், உரல், மற்றும் கடைகளில் உள்ள பழைய லாரி, கார், இருசக்கர வாகன டயர்கள் ஆகியவற்றில் மழைநீர்தேங்கி நிற்பது அகற்றப்பட்டு தூய்மை செய்யப்பட்டது. மக்களுக்கு சுகாதாரத்துடன் இருப்பது குறித்தும், டெங்கு வராமல் தடுப்பது குறித்து உரிய ஆலோசனை வழங்கப்பட்டது. 

வீட்டில் தேங்கி நிற்கும் தண்ணீர் தொட்டிகள் மற்றும் பாத்திரங்களில் நீண்ட நாட்களாக உள்ள குடிநீரில் எவ்வாறு கொசு புழுக்கள் உற்பத்தியாகிறது என்பது குறித்து விளக்கினர். வீடுகளுக்குச் சென்று பார்வையிட்டனர். அதேபோல் மேல் நிலைத்தொட்டிகளில் உள்ள குடிநீரிலும், வார்டுகளில் உள்ள குடிநீர் தொட்டிகளிலும் குளோரின் பவுடர் போடப்பட்டது.
Tags:    

Similar News