ஆட்டோமொபைல்
கியா சொனெட்

அசத்தல் அம்சங்களுடன் இந்தியாவில் கியா சொனெட் அறிமுகம்

Published On 2020-09-18 09:36 GMT   |   Update On 2020-09-18 09:36 GMT
கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய சொனெட் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

கியா மோட்டார்ஸ் நிறுவனம் சொனெட் எஸ்யுவி மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் விலை ரூ 6.71 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடல் மூன்று என்ஜின் மற்றும் ஐந்து டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. 

புதிய கியா சொனெட் அந்நிறுவனத்தின் முதல் 4 மீட்டர்களுக்குள் உருவாகி இருக்கும் காம்பேக்ட் எஸ்யுவி மாடல் ஆகும். மேலும் இது இந்தியாவில் உருவான இரண்டாவது வாகனம் ஆகும். 



முன்னதாக சொனெட் எஸ்யுவி மாடல் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் கான்செப்ட் வடிவில் அறிமுகம் செய்யப்பட்டது. கியா சொனெட் மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல், 1.0 லிட்டர் டி-ஜிடிஐ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் யூனிட் வழங்கப்படுகிறது. 

மூன்று என்ஜின்களும் பிஎஸ்6 புகை விதிகளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. எனினும், இவே அதே அளவு செயல்திறனை வழங்குகின்றன. 

கியா சொனெட் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல், 1.5 லிட்டர் டீசல் யூனிட் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ், டீல் யூனிட் ஆப்ஷனல் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் யூனிட் ஆப்ஷனில் கிடைக்கிறது. 

இதன் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினுடன் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக். 6 ஸ்பீடு இன்டெலிஜன்ட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனில் கிடைக்கிறது.
Tags:    

Similar News