செய்திகள்
மன்சுக் மாண்டவியா

இந்தியாவில் 95 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: மத்திய அமைச்சர் தகவல்

Published On 2021-10-10 11:23 GMT   |   Update On 2021-10-10 11:23 GMT
இந்தியாவில் கடந்த சில தினங்களாக தினந்தோறும் சுமார் ஒரே கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வரும் நிலையில் மொத்த எண்ணிக்கை 95 கோடியை தாண்டியுள்ளது.
இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் பணி தொடங்கியது. முதலில் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்கள பணியார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன்பின் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கும், 45 வயதிற்கு மேற்பட்ட இணைநோய் உள்ளவர்களுக்கும் செலுத்தப்பட்டது.

இந்த சமயத்தில் கொரோனோ தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்கள் பயந்தனர். அதன்பின் 45 வயதிற்கு மேற்பட்டோர் அனைவருக்கும், மே 1-ந்தேதியில் இருந்து 18 வயதிற்கு மேற்பட்டோர் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி அளித்தது.



அப்போதுதான் கொரோனா தொற்றின் 2-ம் கட்ட அலை விஸ்வரூபம் எடுத்தது. இதனால் மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆர்வம் காட்டினர். இதனால் தினந்தோறும் லட்சத்திற்கும் மேற்பட்ட கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வந்தது.

தற்போது உற்பத்தியும் அதிகரித்துள்ளது. மக்களிடம் விழிப்புணர்வும் அதிகரித்துள்ளது. இதனால் ஒவ்வொரு மாநிலங்களும் மெகா முகாம் நடத்தி மிக்பெரிய எண்ணிக்கையில் தடுப்பூசி செலுத்து வருகின்றன. ஆகவே, இந்தியாவில் சில தினங்களாக தினசரி ஒரே கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இந்தியாவில் 95 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News