ஆட்டோமொபைல்
ஜாவா பெராக்

புதிய ஜாவா பெராக் இந்திய வெளியீட்டு தேதி

Published On 2019-11-09 10:55 GMT   |   Update On 2019-11-09 10:55 GMT
கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனத்தின் ஜாவா பெராக் மோட்டார்சைக்கிள் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனத்தின் ஜாவா பெராக் மோட்டார்சைக்கிள் நவம்பர் 15 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. முன்னதாக பெராக் மோட்டார்சைக்கிள் ஜாவா 42 மற்றும் ஜாவா மோட்டார்சைக்கிள் மாடல்களுடன் அறிமுகம் செய்யப்பட்டது. எனினும், ஜாவா பெராக் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது.

புதிய ஜாவா பெராக் மோட்டார்சைக்கிள் ஜாவா மாடலை தழுவி உருவாகி இருக்கிறது. எனினும், ஜாவா பெராக் மாடலை வித்தியாசப்படுத்த சில அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அதன்படி ஜாவா பெராக் மாடலில் மேம்பட்ட எக்சாஸ்ட் மற்றும் ஃபென்டர் வழங்கப்பட்டுள்ளது.



ஜாவா பெராக் மாடலில் 334சிசி லிக்விட் கூல்டு, சிங்கிள் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 30 பி.ஹெச்.பி. பவர், 31 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இது ஜாவா மற்றும் ஜாவா 42 மாடல்களை விட 3 பி.ஹெச்.பி. மற்றும் 3 என்.எம். டார்க் அதிகம் ஆகும். இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

முன்னதாக இந்நிறுவனம் நவம்பர் 15 ஆம் தேதி அறிவிப்பை வெளிடுவதாக தெரிவித்து இருந்தது. இதில் அந்நிறுவனத்தின் எதிர்கால திட்டங்களும் அறிவிக்கப்படலாம். அடுத்த 18 மாதங்களில் கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனம் மொத்தம் நான்கு புதிய மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

ஏற்கனவே வெளியான தகவல்களின்படி இந்தியாவில் ஜாவா பெராக் மாடல் விலை ரூ. 1.89 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 
Tags:    

Similar News