தொழில்நுட்பம்
மோட்டோ வாட்ச் 100

14 நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும் மோட்டோ வாட்ச் அறிமுகம்

Published On 2021-11-17 11:31 GMT   |   Update On 2021-11-17 11:31 GMT
மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 14 நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்குகிறது.


மோட்டோ வாட்ச் 100 பெயரில் புது ஸ்மார்ட்வாட்ச் அறிமுகமாகி இருக்கிறது. இதனை இ-பை-நௌ எனும் நிறுவனம் உற்பத்தி செய்து இருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் மோட்டோ வாட்ச் ஓ.எஸ். கொண்டிருக்கிறது. 

அம்சங்களை பொருத்தவரை புதிய மோட்டோ வாட்ச் 100 மாடலில் 1.3 இன்ச் எல்.சி.டி. ஸ்கிரீன், 42 எம்.எம். அலுமினியம் கேசிங், இதய துடிப்பு மற்றும் எஸ்.பி.ஓ.2 மாணிட்டரிங், 26 ஸ்போர்ட் மோட்கள் வழங்கப்பட்டு உள்ளன. 



இத்துடன் 5 ஏ.டி.எம். தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் அக்செல்லோமீட்டர், கைரோஸ்கோப், ஜி.பி.எஸ்., பெய்டூ, ப்ளூடூத் 5 எல்.இ. போன்ற கனெக்டிவிட்டி அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மொத்த எடை 45.8 கிராம் ஆகும். முழுமையாக சார்ஜ் செய்தால் இந்த ஸ்மார்ட்வாட்ச் 14 நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்குகிறது.

மோட்டோ வாட்ச் 100 மாடல் கிளேசியர் சில்வர் மற்றும் பேண்டம் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 99.99 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 7,449 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அமெரிக்காவில் இந்த வாட்ச் மோட்டோவாட்ச் வலைதளத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது.
Tags:    

Similar News