உள்ளூர் செய்திகள்
இலத்தூர் சாலையில் ஆக்கிரமித்துள்ள முட்புதர்கள்

செங்கோட்டையில் சாலையோர முட்புதர்களை அகற்ற கோரிக்கை

Published On 2022-01-15 07:41 GMT   |   Update On 2022-01-15 07:41 GMT
செங்கோட்டை தாலுகா இலத்தூரில் உள்ள பெரியகுளம் பிரதான சாலையை ஆக்கிரமித்துள்ள முட்புதர்களை அகற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்கோட்டை:

செங்கோட்டை தாலுகாவுக்கு உட்பட்ட இலத்தூரில் உள்ள பெரியகுளம் பிரதான சாலையாக உள்ளது. 

மேலும்  திருவெற்றியூர், நெடுவயல், அச்சன்புதூர்,  வடகரை  உள்ளிட்ட ஊர்களின் இணைப்பு சாலையாக விளங்கும் பெரியகுளம் பகுதி வழியாக நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றனர். 

இப்பகுதியை சுற்றி விவசாய நிலங்கள் அதிகளவில் காண படுவதால் விவசாய பொருட்களை எடுத்து செல்லவும் இச்சாலையை தான் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். 

இந்நிலையில்  சாலையின் இருபுறங்களிலும் பரா மரிப்பில்லாததால் ரோட்டோரங்களில் காடு போல் செடிகள் வளர்ந்துள்ளன. 

பாதசாரிகள் ரோட்டோரம் நடந்து செல்லவும், இரு சக்கர வாகனங்கள், வாகனங்கள் ஒதுங்க முடியாமல் சிரமம் ஏற்படுகிறது. 

மேலும் குளத்து கரையில் மின் விளக்குகள் இல்லாத சூழ்நிலையில் அடர்ந்த புதர்களில் விஷ சந்துகளின் கூடாரமாக விளங்கி வருவதால் இரவு நேரங்களில் பாதசாரிகள் மற்றும் வாகன யோட்டிகள் பெருமளவில் சிரமப்படுகின்றனர். 

எனவே பொதுமக்களின் நலன்கருதி சாலையோர புதர்களை அகற்றி குளத்துக்கரையில் மின் விளக்கு வசதிகள் செய்து தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News