செய்திகள்
சிகிச்சை பெறும் நோயாளிகள்

நாக்பூரில் படுக்கையை பகிர்ந்து கொள்ளும் கொரோனா நோயாளிகள்

Published On 2021-04-04 16:25 GMT   |   Update On 2021-04-04 16:25 GMT
மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனையில் படுக்கையை பகிர்ந்து கொள்ளும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜெட் வேகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நேற்று 50 ஆயிரத்தை நெருங்கிய நிலையில், இன்று 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

கடந்த ஆண்டு உச்சத்தில் இருக்கும்போது ஏறக்குறைய அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனா வார்டு அமைக்கப்பட்டது. கொரோனா குறைய ஆரம்பித்த பின் அறிகுறிகள் அல்லாத பெரும்பாலான நோயாளிகள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

கொரோனா வார்டுகள் அப்புறப்படுத்தப்பட்டன. தற்போது அதிகரித்து வரும் நிலையைில் உடனடியாக வார்டுகளை அமைக்க முடியவில்லை.

நாக்பூரில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதுமான படுக்கை வசதிகள் இல்லை. இதனால் ஒருவருக்கொரும் பகிர்ந்து கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.



நாக்பூர் ஜிஎம்சி மருத்துவனை மெடிக்கல் கண்காணிப்பாளர் டாக்டர் அவினாஷ் இதுகுறித்து கூறுகையில் ‘‘கொரோனா நோயால் பாதிக்கபட்டவர்கள் நகரம் மற்றும் கிராமத்தில் இருந்து மட்டும் வரவில்லை. சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேசத்தில் இருந்தும் வந்துள்ளனர். இதனால் இப்படி நடந்துள்ளது.

ஓடிபி 50 முதல் 60 சதவீதம் உள்ளது. தற்போதைய சூழ்நிலையில் நோயாளிகளை காத்திருக்க வைக்க முடியாது. அது அவர்களின் ஆக்சிஜன் அளவை பாதிக்கும். அதிகமான நபர்கள் வந்ததால் இப்படி நடந்துள்ளது. வழக்கமாக இப்படி கிடையாது. அவர்கள் 15 முதல் அரை மணி நேரம் காத்திருக்கிறார்கள்’’ என்றார்.
Tags:    

Similar News