செய்திகள்
ஓ.பன்னீர்செல்வம்

சென்னை எல்லை சுற்றுச்சாலை திட்டத்துக்கு ரூ.12 ஆயிரம் கோடி- ஓ.பன்னீர்செல்வம்

Published On 2021-02-23 07:23 GMT   |   Update On 2021-02-23 07:23 GMT
5 பகுதிகள் கொண்ட 133.87 கி.மீட்டர் நீளமுள்ள சாலைகளில் சென்னை எல்லை சுற்றுச்சாலை திட்டம், 12 ஆயிரத்து 301 ரூபாய் மொத்த மதிப்பீட்டில் செயல்படுத்தப்படுவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சென்னை:

தமிழகத்தின் இடைக்கால பட்ஜெட்டை  தாக்கல் செய்து ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

உலக வங்கியுடன் விரிவான கலந்துரையாடலுக்குப்பின் மாநகரக் கூட்டாண்மை ஒரு தனித்தன்மை வாய்ந்த வளர்ச்சித் திட்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்கான ஒப்புதல் மத்திய அரசிடம் இருந்து பெறப்பட்டுள்ளது. மேலும், உலக வங்கியுடன் கடன் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகள் விரைவில் நடைபெறும்.

இத்திட்டம் மூன்று கட்டங்களாக ஏழாண்டு காலத்தில் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் முதல் கட்டம் 3,140 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்படும். இதில் உலக வங்கியின் நிதியுதவியாக 300 மில்லியன் அமெரிக்க டாலர் அடங்கும்.

2020-21-ம் ஆண்டில் 3,167.28 கி.மீட்டர் நீளமுள்ள சாலைகளை அகலப்படுத்துதல், வலுப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் பணிகளுக்கும், 3,220.60கி.மீட்டர் நீளமுள்ள சாலைகளின் ஓடுதளப்பாதை தரத்தினை மேம்படுத்துவதற்கான பணிகளுக்கும், 706 பாலங்கள் மற்றும் சிறுபாலங்களுக்கான கட்டுமானப் பணிகளுக்கும் 5 ஆயிரத்து 300 கோடி ரூபாய் செலவில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

உலக வங்கி நிதியுதவியுடன் ‘தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டத்தின்’ இரண்டாவது கட்டம் 5 ஆயிரத்து 171 ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

சென்னை கன்னியாகுமரி தொழில் வழித்தடத்திட்டம் ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன் 6 ஆயிரத்து 448 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

5 பகுதிகள் கொண்ட 133.87 கி.மீட்டர் நீளமுள்ள சாலைகளில் சென்னை எல்லை சுற்றுச்சாலை திட்டம், 12 ஆயிரத்து 301 ரூபாய் மொத்த மதிப்பீட்டில் செயல்படுத்தப்படுவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News