செய்திகள்
கொரோனா வைரஸ்

ரஷியாவில் கொரோனா பலி அதிகரிப்பு- பணியாளர்களுக்கு ஒரு வாரம் விடுமுறை

Published On 2021-10-20 19:22 GMT   |   Update On 2021-10-20 19:22 GMT
பணியாளர்கள் ஒரு வாரம் அலுவலகங்கள் வர வேண்டியதில்லை. அவர்களுக்கு விடுமுறை. அவர்கள் வீட்டிலேயே இருந்து கொள்ளலாம்.
மாஸ்கோ:

ரஷியாவில் கொரோனாவால் ஏற்படுகிற பலிகள் அதிகரித்து வருகின்றன. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 1,028 பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர். இதனால் அங்கு கொரோனா உயிரிழப்பு 2 லட்சத்து 26 ஆயிரத்து 353 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பரவல், உயிரிழப்புகளை தடுக்க அங்குள்ள புதின் அரசு ஒரு அதிரடி முடிவு எடுத்துள்ளது.

இதன்படி பணியாளர்கள் ஒரு வாரம் அலுவலகங்கள் வர வேண்டியதில்லை. அவர்களுக்கு விடுமுறை. அவர்கள் வீட்டிலேயே இருந்து கொள்ளலாம்.

இதற்கான முடிவு, மந்திரிசபை கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு அதிபர் புதினும் ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்த திட்டம் வரும் 30-ந் தேதி முதல் ஒரு வாரம் அமலில் இருக்கும்.

Tags:    

Similar News