ஆன்மிகம்
பெருமாள்

புரட்டாசி மாதபிறப்பையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை

Published On 2020-09-18 06:55 GMT   |   Update On 2020-09-18 06:55 GMT
புரட்டாசி மாதபிறப்பையொட்டி கோவில்களில் சிறப்பு திருமஞ்சனம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதில் பக்தர்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளிவிட்டு தரிசனம் செய்தனர்.
புரட்டாசி மாதத்தில் பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். இதிலும் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில்களில் காலையில் திருமஞ்சனம், சிறப்பு பூஜை, மாலையில் கருட சேவை நடைபெறும். தற்போது கொரோனா பாதிப்பால் கருட சேவை வீதி உலாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று புரட்டாசி மாத பிறப்பையொட்டி நெல்லையில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.

நெல்லை சந்திப்பு வரதராஜ பெருமாள் கோவிலில் காலையில் பெருமானுக்கு சிறப்பு திருமஞ்சனமும், அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது. இதேபோல் பாளையங்கோட்டை ராஜகோபாலசாமி கோவில், ராமசாமி கோவில், அருகன்குளம் காட்டு ராமர் கோவில், ஜடாயு தீர்த்தம் லட்சுமி நாராயணர் கோவில், எட்டெழுத்து பெருமாள் கோவில் உள்ளிட்ட பெருமாள் கோவில்களில் சிறப்பு திருமஞ்சனம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதில் பக்தர்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளிவிட்டு தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News