செய்திகள்
திருவாரூர் பழைய பஸ் நிலையம் அருகில் அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தபோது எடுத்தபடம்.

மத்திய அரசை கண்டித்து அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Published On 2021-07-24 14:55 GMT   |   Update On 2021-07-24 14:55 GMT
மத்திய அரசை கண்டித்து திருவாரூர், மன்னார்குடியில் அனைத்து தொழிற் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருவாரூர்:

நாடு முழுவதும் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் மத்திய அரசின் நவீன கொள்கைகளை கைவிட வேண்டும். அத்தியாவசிய பராமரிப்பு சேவை சட்டத்தை வாபஸ் பெற வேண்டும். சுரங்கம், வங்கி, ஆயுள் காப்பீட்டு கழகங்கள், ரெயில்வே, தொழிற்சாலைகளை தனியார் மயமாக்குவதை வாபஸ் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர்.

அதன்படி திருவாரூர் பழைய பஸ்நிலையம் அருகில் மத்திய தொழிற்சங்கங்களின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் மாலதி, ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட தலைவர் குணசேகரன், எல்.பி.எப். மாவட்ட தலைவர் குருநாதன், ஐ.என்.டி.யூ.சி. நிர்வாகி அம்பிகாபதி ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் நிர்வாகிகள் பழனிவேல், அனிபா, வைத்தியநாதன், தர்மலிங்கம், மாரியப்பன், செல்வம், குணசேகரன், காளிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

இதேபோல் மன்னார்குடியில் தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கே.எஸ்.மகாதேவன், சி.ஐ.டி.யூ.மாவட்ட செயலாளர் முருகையன், ஏ.ஐ.டி.யூ.சி மாவட்ட செயலாளர் புண்ணீஸ்வரன் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்

அத்தியாவசிய பாதுகாப்பு சேவை அவசர சட்டத்தை திரும்பப்பெற வேண்டும். பெட்ரோல், டீசல், விலையை ஜி.எஸ்.டி. வரிக்குள் கொண்டுவர வேண்டும் என்பது உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Tags:    

Similar News