உண்மை எது
வைரல் புகைப்படம்

சாலையில் உறங்கி கொண்டிருந்தது தேர்வு எழுத வந்தவர்களா?

Published On 2021-12-01 04:59 GMT   |   Update On 2021-12-01 04:59 GMT
நெடுந்தூரம் பயணத்து வந்த தேர்வர்கள் அசதி காரணமாக சாலையில் படுத்து உறங்கினர் என கூறி புகைப்படம் வைரலாகி வருகிறது.


பொது மக்கள் வீதியில் படுத்து உறங்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரல் புகைப்படத்தில் உறங்கி கொண்டிருப்பவர்கள் நீண்ட தூரம் பயணித்து உத்திர பிரதேச மாநிலத்தின் ஆசிரியர் தகுதி தேர்வில் பங்கேற்க வந்தவர்கள் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

ஆசிரியர் தகுதி தேர்வு வினாத்தாள் வாட்ஸ்அப் குரூப் ஒன்றில் கசிந்ததாக செய்தி வெளியானதை அடுத்து தேர்வு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 



வைரல் புகைப்படத்தை ஆய்வு செய்ததில், அதில் உறங்கி கொண்டிருப்பவர்கள் ராஜஸ்தான் எகிக்ராட் மகாசங் உறுப்பினர்கள் என தெரியவந்துள்ளது. இவர்கள் உத்திர பிரதேச மாநிலத்தின் லக்னோ நகரில் உள்ள இகோ பூங்காவின் வெளியில் உறங்கி கொண்டிருக்கின்றனர். 

உண்மையில் இவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்பூரில் இருந்து லக்னோவிற்கு பயணம் செய்து பிரியண்கா காந்தி வத்ராவை சந்திக்க வந்துள்ளனர். அந்த வகையில் வைரல் புகைப்படத்தில் உறங்கி கொண்டிருப்பவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வில் பங்கேற்க வந்தவர்கள் இல்லை என உறுதியாகிவிட்டது.
Tags:    

Similar News