செய்திகள்
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்.

சிவகங்கையில் லேப்டாப் வழங்கக்கோரி மாணவர்கள் போராட்டம்

Published On 2021-01-13 11:50 GMT   |   Update On 2021-01-13 11:50 GMT
சிவகங்கையில் லேப்டாப் வழங்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அமைச்சரின் காரை முற்றுகையிட சென்றால் போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
சிவகங்கை:

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 2017-2018-ம் ஆண்டில் பிளஸ்-2 படித்த மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க வேண்டும் என்று கோரி சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பு சிவகங்கை மாவட்ட இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் போராட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் 2017-18-ம் கல்வி ஆண்டில் பிளஸ்-2 படித்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

போராட்டம் நடைபெறும்போது கதர் கிராம தொழில் துறை அமைச்சர் பாஸ்கரன் கலெக்டர் அலுவலக்தில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்டு விட்டு வந்தார். கலெக்டர் அலுவலக வாசலில் அவரது கார் வரும் போது போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அவரது காரை முற்றுகையிட முயன்றனர்.

இதைதொடர்ந்து அங்கு பாதுகாப்பிற்கு நின்ற போலீசார் அவர்களை தடுக்க முயன்றனர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஆனால் அதற்குள் அமைச்சரின் கார் சென்று விட்டது .

இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதைதொடர்ந்து மாணவர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைதொடர்ந்து சிவகங்கை மாவட்ட கல்வி அதிகாரி அமுதா அங்கு வந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் மாணவர்கள் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் முதன்மை கல்வி அலுவலரிடம் கோரிக்கை மனு கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர்.
Tags:    

Similar News