உள்ளூர் செய்திகள்
ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு.

கூடுதல் ரெயில் பெட்டிகள் இணைப்பு

Published On 2022-05-05 11:01 GMT   |   Update On 2022-05-05 11:01 GMT
வெளி மாநில தேர்வர்களுக்காக ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.
மதுரை


ெரயில்வே வாரிய தேர்வுக்காக விண்ணப்பித்த வர்களுக்கு அருகில் உள்ள மாநிலங்களில் மையங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. எனவே விண்ணப்ப தாரர்க ளின் வசதிக்காக ஒரு சில ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்ப ட்டு உள்ளன.

அதன்படி தாம்பரத்தில் இருந்து நாளை (6-ம் தேதி) புறப்படும் நாகர்கோவில் சிறப்பு ெரயில், சென்னை சென்ட்ரல் - நாகர்கோவில் ெரயில், மறுமார்க்கத்தில் நாகர்கோவிலில் இருந்து மே 8-ம்தேதி புறப்படும் தாம்பரம் சிறப்பு ரயில் மற்றும் நாகர்கோவில்-சென்னை சென்ட்ரல் ெரயில் ஆகியவற்றிலும் கூடுதலாக 2 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள் இணைக்கப்படுகிறது.

அதேபோல மே 7 முதல் 10-ந் தேதி வரை தாம்பரம்- நாகர்கோவில் அந்தியோதயா ெரயில் மற்றும் மே 8 முதல் 11-ந் தேதி வரை நாகர்கோவில் - தாம்பரம் அந்தியோதயா ெரயில் ஆகியவற்றில் 2 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள் இணைக்கப்ப டும். ராமேசுவரத்தில் இருந்து நாளை (6-ம் தேதி) புறப்படும் ஓகா வாராந்திர ெரயில் மற்றும் மே 10-ம் தேதி ஓகாவில் இருந்து புறப்படும் ராமேஸ்வரம் வாராந்திர ெரயில், மதுரையில் இருந்து மே 8-ம் தேதி புறப்படும் டெல்லி நிஜாமுதீன் சம்பர்க் கிராந்தி மற்றும் மே 10-ம் தேதி டெல்லியில் இருந்து புறப்படும் மதுரை சம்பர்க் கிராந்தி விரைவு ெரயில் ஆகியவற்றில் கூடுதலாக ஒரு இரண்டாம் வகுப்பு தூங்கும்வசதி பெட்டி இணைக்கப்படும்.

கோவையில் இருந்து மே 8-ம் தேதி புறப்படும் நாகர்கோவில் ெரயில் மற்றும் மே 9-ம் தேதி நாகர்கோவிலில் இருந்து புறப்படும் கோவை ரயில் ஆகியவற்றில் கூடுதலாக ஒரு இரண்டாம் வகுப்பு பெட்டி இணைக்கப்படும். மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ெரயில்வே செய்தி தொடர்பு அலுவலகம் தெரிவித்து உள்ளது.

Tags:    

Similar News