ஆன்மிகம்
தூக்க நேர்ச்சை நடந்த போது எடுத்த படம்.

கொல்லங்கோடு கோவிலில் குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சையில் திரளான பக்தர்கள் பங்கேற்பு

Published On 2021-03-18 09:18 GMT   |   Update On 2021-03-18 09:18 GMT
கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவில் தூக்க நேர்ச்சையில், 45 அடி உயர தூக்க வில்லில் ஒரே நேரத்தில் 4 பேர் தங்கள் கைகளில் தலா ஒரு குழந்தையை சுமந்தபடி கோவிலை சுற்றி வந்து, தூக்க நேர்ச்சை நிறைவேற்றப்பட்து.
கொல்லங்கோடு பத்ரகாளி அம்மனுக்கு தினசரி பூஜை நடைபெற வட்ட விளையில் ஒரு கோவிலும், தூக்க நேர்ச்சை நிறைவேற்ற வெங்கஞ்சியில் மற்றொரு கோவிலும் உள்ளது.

இங்கு ஆண்டுதோறும் மீனபரணி நாளில் தூக்க நேர்ச்சை நடைபெறுகிறது. குழந்தை வரம் வேண்டியும், குழந்தைகள் நோய் நொடியின்றி வாழ வேண்டியும் இங்குள்ள அம்மனுக்கு தூக்க நேர்ச்சை செலுத்தப்படுகிறது.

இதில் 3 மாதத்துக்கு மேல் ஒரு வயதுக்கும் குறைவான குழந்தைகள் மட்டுமே இந்த நேர்ச்சையில் கலந்து கொள்ள முடியும்.

இக்கோவிலில் இந்த ஆண்டுக்கான தூக்கத் திருவிழா கடந்த 9-ந் தேதி கோவில் தந்திரி பிரம்மஸ்ரீ கொட்டாரக்கரை நீலமனை ஈஸ்வரன்போற்றி தலைமையில் கொடியேற் றத்துடன் தொடங்கியது. இதில் 1,092 குழந்தைகள் தூக்க நேர்ச்சைக்கு பதிவு செய்திருந்தனர்.

இந்த நிலையில் பக்தி பரவசமூட்டும் வரலாற்றுச் சிறப்பு மிக்க தூக்க நேர்ச்சை இன்று காலையில் தொடங்கியது.

இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து 4.30 மணிக்கு தூக்கக்காரர்களின் முட்டுகுத்தி நமஸ்காரம் நடந்தது.

காலை 5 மணிக்கு அம்மன் பச்சைப் பந்தலில் எழுந்தருளினார். இதைத் தொடர்ந்து காலை 6.30 மணிக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க தூக்க நேர்ச்சை தொடங்கியது. தூக்க நேர்ச்சையில், 45 அடி உயர தூக்க வில்லில் ஒரே நேரத்தில் 4 பேர் தங்கள் கைகளில் தலா ஒரு குழந்தையை சுமந்தபடி கோவிலை சுற்றி வந்து, தூக்க நேர்ச்சை நிறைவேற்றப்பட்து.

தூக்க நேர்ச்சை நிறைவு பெற்றபின் வில்லின் மூட்டில் குருதி தர்ப்பணத்துடன் விழா நிறைவடைகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News