செய்திகள்
கைது

முத்துப்பேட்டை அருகே பறவைகளை வேட்டையாட முயன்றவர் கைது

Published On 2020-11-01 06:41 GMT   |   Update On 2020-11-01 06:41 GMT
முத்துப்பேட்டை அருகே பறவைகளை வேட்டையாட முயன்றவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து வலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
முத்துப்பேட்டை:

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியில் சமீபகாலமாக பறவைகள் வரத்து அதிகளவில் காணப்படுகிறது. பறவைகளை சமூக விரோதிகள் வேட்டையாடுவதை தடுக்கும் வகையில் மண்டல வன பாதுகாவலர் ராமசுப்பிரமணியன், மாவட்ட வனஅலுவலர் அறிவொளி ஆகியோர் உத்தரவின்பேரில் முத்துப்பேட்டை வனச்சரக அலுவலர் தாஹிர்அலி மேற்பார்வையில் முத்துப்பேட்டை வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தநிலையில் முத்துப்பேட்டை வனவர் பெரியசாமி தலைமையிலான வனத்துறையினர் நேற்று முத்துப்பேட்டை அருகே உள்ள பாண்டி கிராம பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு உள்ள வயலில் பெரிய சிங்கலாந்தி கிராமத்தை சேர்ந்த தேவா மகன் மன்மதன்(வயது31) என்பவர் கொக்கு, மடையான் பறவைகளை பிடிக்கும் நோக்கத்துடன் வலையை விரித்து கட்டிக்கொண்டு இருந்தார். அவரை வனத்துறையினர் கைது செய்து அவரிடம் இருந்து வலைகள் மற்றும் பறவைகளை வேட்டையாட பயன்படுத்திய பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News