செய்திகள்
மேட்டூர் அணை

மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர்வு

Published On 2021-01-20 06:17 GMT   |   Update On 2021-01-20 06:17 GMT
மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 105.85 அடியாக உயர்ந்தது.
மேட்டூர்:

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் மேட்டூர் அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நேற்று 1680 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 1338 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து காவிரியில் 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

நேற்று 105.81 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 105.85 அடியாக உயர்ந்தது.

Tags:    

Similar News