செய்திகள்
ஜெனரேட்டர்

டெல்லியில் ஜெனரேட்டர்கள் பயன்படுத்த அதிரடி தடை

Published On 2020-10-14 11:02 GMT   |   Update On 2020-10-14 11:02 GMT
டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளதால், ஜெனரேட்டர்கள் பயன்படுத்த அம்மாநில அரசு தடைவிதித்துள்ளது.
இந்தியாவின் தலைநகரான டெல்லி காற்று மாசுவால் அவதிப்பட்டு வருகிறது. டெல்லியை சுற்றியுள்ள ஹரியானா, பஞ்சாப், உத்தர பிரதேச மாநிலத்தில் விவசாய கழிவுகள் எரிக்கப்படுவதாலும், போக்குவரத்தாலும் காற்று மாசுவின் தரம் மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளது.

கொரோனா காலத்தில் போக்குவரத்திற்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்ததால் காற்று மாசு குறைந்திருந்தது. தற்போது தளர்வுகள் அளித்துள்ள நிலையில் வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளது.

நேற்று டெல்லியில் காற்று மாசு மோசமாக இருந்தது. இதனால் நாளையில் இருந்து மின்சாரத்திற்காக டீசல், பெட்ரோல், கெரோசின் ஆகியவற்றால் பயன்படுத்தப்படும் ஜெனரேட்டர்களுக்கு தடைவிதிக்கப்படுகிறது என்று டெல்லி அரசு அதிரடி தடைவிதித்துள்ளது.

ஆனால் அத்தியாவசிய மற்றும் அவசர சேவைகளுக்கு பயன்படுத்தலாம் எனத் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News