செய்திகள்
ஓமன் அல் அமீரத் மைதானம்

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடங்கியது- ஓமன் அணி டாஸ் வென்று பீல்டிங் தேர்வு

Published On 2021-10-17 10:04 GMT   |   Update On 2021-10-17 10:04 GMT
முதல் சுற்றில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதிய பிறகு, இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும்.
அல் அமீரத்:

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா இன்று தொடங்கியது. தரவரிசையில் முதல் 8 இடங்களை பிடித்த அணிகள் நேரடியாக சூப்பர்-12 சுற்றில் கால்பதித்துள்ளன. எஞ்சிய 4 அணிகளை தேர்வு செய்வதற்கான முதல் சுற்று போட்டிகள் இன்று தொடங்குகின்றன.

இந்த சுற்றில் 8 அணிகள் பங்கேற்றுள்ளன. தலா 4 அணிகள் வீதம் இரு பிரிவுகளில் விளையாடுகின்றன. ‘ஏ’ பிரிவில் இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து, நமிபியா, ‘பி’ பிரிவில் வங்காளதேசம், ஸ்காட்லாந்து, ஓமன், பப்புவா நியூ கினியா ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதிய பிறகு, இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும். 

முதல் நாளான இன்று மஸ்கட்டில் இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. 'பி' பிரிவில் இடம் பிடித்துள்ள ஓமன் அணி, தனது சொந்த மைதானத்தில் முதல் போட்டியில் பப்புவா நியூ கினியா அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஓமன் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி பப்புவா நியூ கினியா அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
Tags:    

Similar News