செய்திகள்
கொரோனா வார்டில் மருத்துவ பணியாளர்கள்

கொரோனா முதல் அலையை விட 2வது அலையில் அதிகளவில் டாக்டர்கள் உயிரிழப்பு

Published On 2021-06-25 17:53 GMT   |   Update On 2021-06-25 17:53 GMT
கடந்த ஆண்டு பாதிப்பை ஏற்படுத்திய கொரோனாவின் முதல் அலை 748 டாக்டர்களை பலி கொண்டது என இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

கொரோனாவின் இரண்டாவது அலை நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான மக்களை காவு வாங்கியது. இதில் மருத்துவ துறையினரும் அதிக அளவில் பலியானார்கள். குறிப்பாக, கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த ஏராளமான டாக்டர்கள் தங்கள் இன்னுயிரை இழந்தார்கள்.
  
இந்நிலையில், இந்திய மருத்துவ சங்கம் வெளியிட்டுள்ள செய்தியில், நாட்டில் கொரோனா இரண்டாவது அலையில் 776 மருத்துவர்கள் உயிரிழந்து உள்ளனர். 

அவர்களில் அதிக அளவாக பீகார் (115) முதல் இடத்தில் உள்ளது. இதையடுத்து டெல்லி (109), உத்தர பிரதேசம் (79), மேற்கு வங்காளம் (62), ராஜஸ்தான் (44), ஜார்க்கண்ட் (39) மற்றும் ஆந்திர பிரதேசம் (40), ஒடிசா (34) மற்றும் மகாராஷ்டிரா (23) ஆகியவை உள்ளன.

தென்னிந்திய மாநிலங்களில் தமிழகம் (50), கேரளா (24) மற்றும் கர்நாடகா (9) ஆகியவை அடுத்தடுத்த எண்ணிக்கையில் உள்ளன.
Tags:    

Similar News