ஆன்மிகம்
நந்தி

சிவலிங்கத்தை பார்க்காமல் தீப மலையை நோக்கி இருக்கும் நந்தி

Published On 2020-11-04 07:56 GMT   |   Update On 2020-11-04 07:56 GMT
திருவண்ணாமலை தீபம் எரிவது போன்றும், பஞ்சலிங்கங்கள் போன்றும், அர்த்தநாரீஸ்வரர் வடிவமாகவும் பல்வேறு கோணங்களில் காட்சியளிக்கும் ஒரு அதிசய மலையாக திகழ்கிறது.
திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் சுற்றி வரும் தீபமலை பல யுகங்களுக்கு முன் தோன்றியதாக ஞானிகள் ஞானதிருஷ்டி மூலம் கண்டறிந்து தெரிவித்துள்ளனர்.

 தீப மலையை ஒவ்வொரு திசையில் இருந்து பார்த்தாலும் ஒவ்வொரு வடிவத்தை காட்டும். தீபம் எரிவது போன்றும், பஞ்சலிங்கங்கள் போன்றும், அர்த்தநாரீஸ்வரர் வடிவமாகவும் பல்வேறு கோணங்களில் காட்சியளிக்கும் ஒரு அதிசய மலையாக திகழ்கிறது.

திருவண்ணாமலையில் தீபமாக அண்ணாமலையார் இருக்கிறார் என்று பக்தர்கள் நம்புகின்றனர். மலை வடிவத்தில் சிவன் தியானத்தில் இருப்பதாகவும் கருதுகின்றனர்.

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள சில கோவில்களில் நந்திகள் தீப மலையை நோக்கியவாறு அமைக்கப்பட்டுள்ளன.
 
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் சந்திரலிங்கம் சன்னதி அருகில் அமைந்துள்ள ஒருசித்தர் கோவிலில் தஞ்சை பெருவுடையார் போன்ற பெரிய தோற்றத்தில் சிவலிங்கம் உள்ளது. அதன் முன்பு இருக்கும் நந்தி சிவலிங்கத்தை நோக்காமல் திருப்பி எதிரே உள்ள தீபமலையை வணங்கி பார்ப்பது போல் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News