செய்திகள்
மோடி தலைமையில் நடந்த ஆலோசனை

டவ்-தே புயலை எதிர்கொள்வது எப்படி? -பிரதமர் தலைமையில் உயர்மட்ட ஆலோசனை

Published On 2021-05-15 14:40 GMT   |   Update On 2021-05-15 14:40 GMT
மத்திய, மாநில அமைச்சங்கள், பாதுகாப்பு அமைப்புகள் மேற்கொண்டுள்ள புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் புயலை எதிர்கொள்வது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
புதுடெல்லி:

அரபிக் கடலில் உருவாகி உள்ள டவ்-தே புயல் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இந்த புயல் அடுத்த 12 மணி நேரத்தில் அதிதீவிர புயலாக உருவெடுக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து 18ம் தேதி குஜராத் அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதையொட்டி மத்திய, மாநில அரசுகள் சார்பில் பல்வேறு பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக விமானப்படை தயார் நிலையில் உள்ளது.

இந்நிலையில், டவ்-தே புயலை எதிர்கொள்வது குறித்து இன்று பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மத்திய, மாநில அமைச்சங்கள், பாதுகாப்பு அமைப்புகள் மேற்கொண்டுள்ள புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் புயலை எதிர்கொள்வது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. 

கடலோர மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சகங்கள், பாதுகாப்பு அமைப்புகளுடன் அமைச்சரவை செயலாளர் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. கொரோனா நிலவரம் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. 
Tags:    

Similar News