உள்ளூர் செய்திகள்
.

காரிமங்கலம் ஊருக்குள் செல்லாத 6 தனியார் பஸ்கள் மீது வழக்கு

Published On 2022-05-07 09:56 GMT   |   Update On 2022-05-07 09:56 GMT
காரிமங்கலம் ஊருக்குள் செல்லாத 6 தனியார் பஸ்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
காரிமங்கலம்,

கிருஷ்ணகிரியில் இருந்து தருமபுரி நோக்கி செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் அகரம் பிரிவு ரோடு, மொரப்பூர் மேம்பாலம் மீண்டும் சர்வீஸ் ரோடு பஸ் நிலையம், கடைவீதி, ராமசாமி கோவில் வழியாக தருமபுரிக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இதேபோல தருமபுரியில் இருந்து வரும் பஸ்கள் ராமசாமி கோவில், கடைவீதி, பஸ் நிலையம் வழியாக கிருஷ்ணகிரிக்கு செல்ல கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஆனால் கிருஷ்ணகிரி பகுதியில் இருந்து வரும் பஸ்கள் அகரம் பிரிவு ரோட்டில் பயணிகளை இறக்கி விட்டு காரிமங்கலம் ஊருக்குள் வராமல் மேம்பாலம் வழியாக தருமபுரி நோக்கி செல்வதாக வந்த தொடர் புகாரின் பேரில் கலெக்டர் திவ்யதர்ஷினி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

இதையடுத்து ஆர்.டி.ஓ. தாமோதரன் மேற்பார்வையில் மோட்டார் வாகன ஆய்வாளர் வெங்கிடுசாமி மற்றும் போக்குவரத்துதுறை அதிகாரிகள் காரிமங்கலம் பஸ்பாஸ் ரோடு ஆகிய பகுதிகளில திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது காரிமங்கலம் ஊருக்குள் செல்லாமல் பஸ்பாஸ் வழியாக சென்ற 6 தனியார் பஸ்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

தொடர்ந்து ஊருக்குள் செல்லாமல் பஸ்களை இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன் சம்மந்தப்பட்ட டிரைவர் கண்டக்டர் லைசென்சு பறிமுதல் செய்யப்படும் என போக்குவரத்து துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News