செய்திகள்
கீழவெளியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் தூண் பகுதி சேதமடைந்துள்ளதை படத்தில் காணலாம்.

ஆபத்தான நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி- சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

Published On 2020-11-22 09:41 GMT   |   Update On 2020-11-22 09:41 GMT
கீழவெளியில் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உடையார்பாளையம்:

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையத்தை அடுத்த தத்தனூர் ஊராட்சி கீழவெளியில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கீழவெளி தெற்கு தெருவில் சுமார் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குழாய் அமைக்கப்பட்டு குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது.

இந்த நீர்த்தேக்க தொட்டி 2012-13-ம் ஆண்டு சீரமைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக தூண் போன்றவை சேதமடைந்து, எந்த நேரத்திலும் இடிந்து கீழே விழலாம் என்ற ஆபத்தான நிலையில் அந்த தொட்டி உள்ளது. இந்த நீர்த்தேக்க தொட்டியின் அருகே அரசு பள்ளி, ரேஷன் கடை, கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் உள்ளது.

இந்த தொட்டி இடிந்து விழுந்து விபரீதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர்.

எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு, பெரும் சேதம் ஏற்படும் முன்பு சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சீரமைக்க வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News