ஆன்மிகம்
அரசமரம்

வரம் தரும் மரம் எது?

Published On 2019-09-06 09:03 GMT   |   Update On 2019-09-06 09:03 GMT
அரசமரத்தில் மும்மூர்த்திகளும் வாசம் செய்வதாக நம்பப்படுகிறது. இதனால் இந்த மரத்தை ‘தேவலோகத்து மரம்’ என்றும் வர்ணிப்பார்கள்.
எத்தனை மரங்கள் இருந்தாலும் மரங்களின் அரசன் என்று போற்றப்படுவது அரசமரம் தான். இதில் மும்மூர்த்திகளும் வாசம் செய்வதாக நம்பப்படுகிறது. இதனால் இந்த மரத்தை ‘தேவலோகத்து மரம்’ என்றும் வர்ணிப்பார்கள். இந்த மரத்தைச் சுற்றி வலம் வந்தால் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளின் அருள் நமக்குக் கிடைக்கும். அக்னி பகவான் குதிரை ரூபம் எடுத்து ஓடி அரசமரத்தில் புகுந்து கொண்டதால் இம்மரத்தின் குச்சிகளை ஹோமங்களுக்கு பயன்படுத்துகிறோம்.

பிரம்மாவின் சக்தி இம்மரத்தில் இருப்பதால் அரச மரக் காற்றை நாம் சுவாசித்தால் ஆயுள் நீடிக்கும். ஆரோக்கியம் சீராகும். புத்திர பாக்கியம் கிடைக்கும். அரச இலைகளின் சலசலப்பு ஆலய மணி ஓசைபோல இருக்கும். அரச மரத்தடியில் விநாயகப் பெருமானையும், நாகராஜரையும் வைத்து வழிபடுவது வழக்கம். அப்படி வழிபட்டால் காரியத் தடைகள் விலகும். கனிவான வாழ்க்கை அமையும். பொதுவாக வரம் தரும் மரங்களில் முதல் மரம் அரசமரமாகும். எனவே வரம் தரும் மரத்தை வணங்குவோம். தரும் பலன்களால் மகிழ்ச்சியைப் பெறுவோம்.
Tags:    

Similar News