உள்ளூர் செய்திகள்
FILE PHOTO

அபராதம் கட்டாத பிரியாணி கடைக்கு அதிகாரிகள் பூட்டு

Published On 2022-05-05 09:58 GMT   |   Update On 2022-05-05 09:58 GMT
அபராதம் கட்டாத பிரியாணி கடைக்கு அதிகாரிகள் பூட்டு போட்டனர்.
கரூர்:

 கரூர் மாநகராட்சி சுகாதார அலுவலர் லட்சியர்வர்ணா தலைமையில் மாநகராட்சி சுகாதார  அலுவலர்கள் கரூர் உழவர் சந்தை பகுதி கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொரு ட்கள் பயன்படுத்தப்படுகிறதா என ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது உழவர் சந்தை அ ருகேயுள்ள  பிரியாணி கடையில் சாக்கடை கால்வாய் கட்டும் பணி நடைபெறும் இடத்தில் சாலை வரை இழுத்து பலகை  அமைத்து ஆக்கிரமிப்பு செய்திருந்ததுடன், அடுப்பு, கிரில் சிக்கன் பெட்டி ஆகியவற்றை சாலையில் வைத்திருந்ததுடன் சு காதாரமற்ற முறையில் உணவுத் தயாரித்து வந்தனர். இவற்றை கண்டு அவர்களுக்கு மாநகர சுகாதார அலுவலர் ரூ.5,000 அபராதம் விதித்தார்.

உரிமையாளர் இல்லாததால் அபராதத்தொகையை வழங்காமல் இருந்தனர். இதனால் மாநகர சுகாதார அலுவலர் கடைக்கு பூட்டுபோட்டுவிட்டு சென்றார். இதையடுத்து கடை உரிமையாளர் மாநகராட்சி அலுவலகம் சென்று அபராதம் செலுத்தி, விதிகளுக்கு உட்பட்டு நடந்து கொள்வதாக எழுதிக் கொடுத்ததால் கடை திறக்க அனுமதிக்கப்பட்டது.


உழவர் சந்தை, சின்ன ஆண்டாங்கோவில் சாலையில் உள்ள 4 பெரிய கடைகள், 3 சிறிய கடைகளில் ஆய்வு செய்து பெரியகடைகளுக்கு தலா ரூ.5,000, ஒரு சிறிய கடைக்கு ரூ.500 அபராதம் விதித்தனர். மேலும் பல கடைகளில் ஆய்வு செய்து எச்சரிக்கை செய்தனர்.
Tags:    

Similar News