செய்திகள்

அஸ்லான் ஷா ஹாக்கி தொடர் - ஜப்பானை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது இந்தியா

Published On 2019-03-23 13:19 GMT   |   Update On 2019-03-23 13:19 GMT
மலேசியாவில் தொடங்கிய அஸ்லான் ஷா ஹாக்கி கோப்பை தொடரின் முதல் போட்டியில் ஜப்பானை 2 -0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது. SultanAzlanShahCup #India #Japan
இபோக்:

28-வது அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி போட்டி மலேசியாவில் உள்ள இபோக் நகரில் இன்று தொடங்கி 30-ம் தேதி வரை நடக்கிறது. இதில் 5 முறை சாம்பியனான இந்தியா, தென்கொரியா, கனடா, ஜப்பான், போலந்து, மலேசியா ஆகிய 6 அணிகள் பங்கேற்கின்றன.

ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழையும். 

தொடக்க நாளான இன்று நடைபெறும் முதலாவது லீக் ஆட்டத்தில் மன்பிரீத்சிங் தலைமையிலான இந்திய அணி, ஆசிய விளையாட்டு சாம்பியனான ஜப்பானை எதிர்கொண்டது.



ஆட்டத்தின் 24வது நிமிடத்தில் இந்திய அணியின் வருண்குமார் ஒரு கோல் அடித்து அணியை 1- 0 என்ற கணக்கில் முன்னிலைக்கு கொண்டுவந்தார். 

ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் கேப்டன் மன்பிரித் சிங் அபாரமாக ஒரு கோல் அடித்தார். அதன்பின் ஜப்பான் அணியினரால் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை.

ஆட்டத்தின் இறுதியில், இந்தியா 2-0 என்ற கோல் கணக்கில் ஜப்பானை எளிதில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்தியா தனது அடுத்த லீக் போட்டியில் கொரியாவுடன் நாளை மோதுகிறது. #SultanAzlanShahCup #India #Japan
Tags:    

Similar News