செய்திகள்
கைது

கமுதி அருகே மதுபாட்டில் பதுக்கிய 30 பேர் கைது

Published On 2021-04-07 11:48 GMT   |   Update On 2021-04-07 11:48 GMT
கமுதி அருகே மதுபாட்டில் பதுக்கிய 30 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கமுதி:

தமிழகத்தில் தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் மதுபான கடைகளை மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. இதையடுத்து மதுபாட்டில்களை வாங்கி கடைகள், வீடுகளில் பதுக்கி வைக்க ஆரம்பித்தனர். இதையடுத்து ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் அதிரடி வேட்டை நடத்தி மது பதுக்கியதை கண்டுபிடித்து மது பாட்டில்களை கைப்பற்றி கைது நடவடிக்கை மேற்கொண்டனர். கமுதி போலீஸ் துணை சூப்பிரண்டு பிரசன்னா மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் அன்பு பிரகாஷ், மோகன், முருகன் ஆகியோர் தலைமையில் பெருநாழி, கமுதி, கோவிலாங்குளம், அபிராமம், மண்டலமாணிக்கம் போலீஸ் சரகம் ஆகிய பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர். இதுதொடர்பாக 30 பேரை போலீசார் கைது செய்து நூற்றுக்கணக்கான மதுபாட்டில்களை கைப்பற்றினர்.
Tags:    

Similar News