தொழில்நுட்பம்
கேலக்ஸி பட்ஸ் லைவ் ரென்டர்

இணையத்தில் லீக் ஆன சாம்சங் கேலக்ஸி பட்ஸ் லைவ் இயர்பட்ஸ்

Published On 2020-07-31 05:42 GMT   |   Update On 2020-07-31 05:42 GMT
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி பட்ஸ் லைவ் ரென்டர்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது. இதன் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

சாம்சங் நிறுவனம் தனது ட்ரூ வயர்லெஸ் இயர்போன், கேலக்ஸி பட்ஸ் லைவ் மாடலினை கேலக்ஸி அன்பேக்டு 2020 நிகழ்வில் அறிமுகம் செய்ய இருக்கிறது. ஏற்கனவே புதிய இயர்போன்களின் பல்வேறு ரென்டர்கள் இணையத்தில் லீக் ஆகி இருந்தன. தற்சமயம் இந்த இயர்பட்ஸ் புதிய விவரங்கள் வெளியாகி இருக்கின்றன.

புதிய இயர்பட்ஸ் குறிப்பிடத்தக்க அம்சமாக அதன் சதுரங்க வடிவம் கொண்ட சார்ஜிங் கேஸ் இருக்கிறது. இது பிளாக் நிற வேரியண்ட்டிலும் கிடைக்கிறது. முன்னதாக இந்த இயர்பட்ஸ் மிஸ்டிக் பிளாக் மற்றும் மிஸ்டிக் பிரான்ஸ் என இருவித நிறங்களில் கிடைக்கும் என கூறப்பட்டது.



அம்சங்களை பொருத்தவரை ஒவ்வொ இயர்பட்டிலும் மூன்று மைக்ரோபோன்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதில் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி வழங்கப்படும் என தெரிகிறது. இவற்றில் 12 எம்எம் டைனமிக் டிரைவர்கள் வழங்கப்படுகின்றன. இவற்றில் சிலிகான் இயர் டிப்கள் இருக்காது என சமீபத்திய ரென்டர்களில் தெரியவந்துள்ளது.   

புதிய சாம்சங் இயர்பட்ஸ் ஒருமுறை சார்ஜ் செய்தால் 4 முதல் 5 மணி நேரத்திற்கு பேக்கப் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் சார்ஜிங் கேஸ் சேர்க்கும் போது பேக்கப் நேரம் கூடுதலாக கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி பட்ஸ் லைவ் துவக்க விலை 169 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 12,600 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இயர்பட்ஸ் உடன் கேலக்ஸி நோட் 20, கேலக்ஸி வாட்ச் 3, கேலக்ஸி டேப் எஸ்7 மற்றும் கேலக்ஸி இசட் ஃபோல்டு 2 உள்ளிட்டவை அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News