செய்திகள்
கோப்புப்படம்

குருவிகுளத்தில் பெண்-விவசாயி மீது தாக்குதல்

Published On 2020-01-11 11:52 GMT   |   Update On 2020-01-11 11:52 GMT
சங்கரன்கோவில் அருகே குருவிகுளத்தில் இடப்பிரச்சனையில் பெண் மற்றும் விவசாயி மீது தாக்குதல் நடத்தப்பட்டகு றித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:

சங்கரன்கோவில் அருகே உள்ள குருவிகுளத்தை அடுத்த செந்தட்டி குளம் பகுதியை சேர்ந்தவர் குருசாமி. இவரது மனைவி அந்தோணியம்மாள்(வயது 55). அதே பகுதியை சேர்ந்தவர் கார்த்தி மகன் கனகராஜ்.

இவர்கள் இருவருக்கும் இடையே இடப்பிரச்சனை காரணமாகவும், வயலில் தண்ணீர் பாய்ச்சுவது காரணமாகவும் தகராறு இருந்துவந்தது. இந்நிலையில் நேற்றும் இருவருக்குமிடையே தகராறு வந்துள்ளது. தகராறு முற்றவே, ஆத்திரமடைந்த கனகராஜ், அந்தோணியம்மாளை வயலில் கிடந்த கம்பால் தாக்கியுள்ளார்.

இதில் அந்தோணியம்மாள் காயமடைந்தார். இதுகுறித்து அவர் குருவிகுளம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் கனகராஜ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மானூர் அருகே உள்ள தெற்குபட்டியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்(வயது 45). இவருக்கும், இவரது சகோதரர் கிருஷ்ணசாமி. இவர்களுக்கு சொந்தமான வயல் அப்பகுதியில் உள்ளது. அதில் இருவரும் விவசாயம் செய்து வந்தனர்.

இந்நிலையில் இருவருக்கும் இடையே அந்த வயலை பங்கு வைப்பது தொடர்பாக பிரச்சனை வந்துள்ளது. இதில் அடிக்கடி இருவருக்கும் தகராறும் ஏற்பட்டுள்ளது. நேற்று இதுதொடர்பாக வயக்காட்டில் வைத்து இருவரும் சண்டையிட்டுள்ளனர். அப்போது இருவரும் ஒருவரையொருவர் கம்பியால் தாக்கியுள்ளனர். இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதை பார்த்த அங்கிருந் தவர்கள் ராமகிருஷ்ணனை மீட்டு, நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதேபோல் கிருஷ்ணசாமியை ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதுகுறித்து ராமகிருஷ்ணன் மானூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் கிருஷ்ணசாமி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News