ஆன்மிகம்
அய்யனார் பெருமாள் கோவில் திருவிழாவில் திரண்ட பக்தர்கள்

அய்யனார் பெருமாள் கோவில் திருவிழாவில் திரண்ட பக்தர்கள்

Published On 2021-10-11 08:25 GMT   |   Update On 2021-10-11 08:25 GMT
திருமணம் ஆன பெண்கள் குழந்தை வரம் வேண்டியும், விரதம் இருந்து சைவ உணவை சாப்பிட்டு அந்த உணவில் பாதியை கண்மாயில் மீன்களுக்கு உணவாக வழங்குவது பாரம்பரிய வழக்கம்.
மேலூர் அருகே அ.கோவில்பட்டி என்ற கல்லம்பட்டியில் தண்ணுற்று கண்மாய் கரையில் பிரசித்து பெற்ற அய்யனார் பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலை அட்டபட்டி, அ.கல்லம்பட்டி, அ.கோவில்பட்டி, பூதமங்கலம் உள்பட சுற்றி உள்ள கிராம மக்கள் காவல் தெய்வங்களாக வணங்கி வருகின்றனர். இங்கு புரட்டாசி பூஜை பாரம்பரிய வழக்கப்படி நடைபெற்று வருகிறது.

25 நாட்கள் கடுமையான விரதம் இருந்தனர். பல நூறு ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த புரட்டாசி பூஜையில் திருமணம் ஆக வேண்டி பெண்கள், திருமணம் ஆன பெண்கள் குழந்தை வரம் வேண்டியும், விரதம் இருந்து சைவ உணவை சாப்பிட்டு அந்த உணவில் பாதியை கண்மாயில் மீன்களுக்கு உணவாக வழங்குவது பாரம்பரிய வழக்கம். அவ்வாறு வழங்கினால் நினைப்பது நிறைவேறும் என்பது ஐதீகம் ஆகும்.

இந்த நிலையில் நேற்று மாலை 5 மணியளவில் சிறப்பு வழிபாடுகளுடன் புரட்டாசி பூஜை நடைபெற்றது. பூஜை முடிந்த பின் 2 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News