உள்ளூர் செய்திகள்
முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி

திருவள்ளூரில் சுகாதார பணியாளர்கள் - முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி

Published On 2022-01-11 10:49 GMT   |   Update On 2022-01-11 10:49 GMT
திருவள்ளூர் மாவட்டம் டோல்கேட் அருகே உள்ள ஐ.சி.எம்.ஆர். பகுதியில் உள்ள அரசு மகளிர் விடுதியில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றன.
திருவள்ளூர்:

திருவள்ளூரில் முன்கள பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு, 'பூஸ்டர்' தடுப்பூசி போடப்படும் தமிழக அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தலின் பேரில் சுகாதாரத்துறையினர் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி, ஒன்பது மாதங்கள் அல்லது 39 வாரங்களை கடந்த சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள், 60 வயதிற்கு மேற்பட்ட முதியோருக்கு, முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி என்ற 'பூஸ்டர்' தடுப்பூசி போடப்படுகிறது.

இதனால் திருவள்ளூர் அடுத்த டோல்கேட் அருகே உள்ள ஐ.சி.எம்.ஆர். பகுதியில் உள்ள அரசு மகளிர் விடுதியில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றன. இதனை அறிந்த பொதுமக்கள் மற்றும் முன்கள பணியாளர்கள் ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர்


Tags:    

Similar News