செய்திகள்
விழிப்புணர்வு ஊர்வலம்

தூய்மையே சேவை முனைப்பியக்க விழிப்புணர்வு ஊர்வலம்

Published On 2019-10-13 18:02 GMT   |   Update On 2019-10-13 18:02 GMT
பெரம்பலூர் மாவட்ட சுற்றுலாத்துறை ஆகியவற்றின் சார்பில் தூய்மையே சேவை முனைப்பியக்க விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
பாடாலூர்:

இளம் செஞ்சிலுவை சங்கம் (ஜூனியர் ரெட் கிராஸ்) மற்றும் பெரம்பலூர் மாவட்ட சுற்றுலாத்துறை ஆகியவற்றின் சார்பில் தூய்மையே சேவை முனைப்பியக்க விழிப்புணர்வு ஊர்வலம் செட்டிகுளத்தில் நேற்று நடந்தது. செட்டிகுளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் இருந்து தொடங்கிய இந்த ஊர்வலத்தை, பள்ளி தலைமை ஆசிரியர் நாகமணி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ஊர்வலமானது பதிவு அலுவலகம், போஸ்ட் ஆபீஸ் வீதி, கடைவீதி வழியாக சென்று செட்டிக்குளம் ஏகாம்பரே‌‌ஷ்வரர் கோவிலில் முடிவடைந்தது. ஊர்வலத்தில் கலந்து கொண்ட இளம் செஞ்சிலுவை சங்க மாணவர்கள் தூய்மை குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியவாறும், கோ‌‌ஷங்களை எழுப்பியவாறு, துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடையே கொடுத்தும் விழிப் புணர்வு ஏற்படுத்தினர். ஊர்வலத்திற்கு மாவட்ட உதவி சுற்றுலா அலுவலர் வரதராஜன், பொன்னுத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளம் செஞ்சிலுவை சங்கத்தின் மாவட்ட அமைப்பாளர் ராதாகிரு‌‌ஷ்ணன் வரவேற்றார். என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர் ரஞ்சித்குமார் நன்றி கூறினார். பின்னர் அனைத்து மாணவர்களும் செட்டிகுளம் ஏகாம்பர‌‌ஷ்வரர் கோவிலில் உழவார பணியை மேற்கொண்டனர். உழவார பணியினை கோவில் செயல் அலுவலர் யுவராஜ் தொடங்கி வைத்து, தூய்மையின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார். கோவில் எழுத்தர் தண்டபாணி தேசிகன் உழவார பணி செய்யும் மாணவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்தார்.
Tags:    

Similar News