செய்திகள்
உத்தவ் தாக்கரே

பக்ரீத் பண்டிகையை எளிமையாக கொண்டாட உத்தவ் தாக்கரே வேண்டுகோள்

Published On 2020-07-15 04:28 GMT   |   Update On 2020-07-15 04:28 GMT
வரவிருக்கும் பக்ரீத் பண்டிகையை எளிமையாக கொண்டாட வேண்டும் என்றும் பக்ரீத் பண்டிகைக்காக ஆடுகளை விற்பனை செய்வதற்கு இடம் ஒதுக்க வேண்டும் என வற்புறுத்தக்கூடாது என்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.
மும்பை :

உலக நாடுகளை நடுநடுங்க வைத்துள்ள ஆட்கொல்லி கொரோனா வைரசால் அனைத்து பண்டிகை கொண்டாட்டங்களும் முடக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், பக்ரீத் பண்டிகை அடுத்த மாதம் (ஆகஸ்டு) 1-ந் தேதி கொண்டாடப்படுகிறது.

இந்த நிலையில், பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம் தொடர்பாக முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே வீடியோ கான்பரன்சிங் மூலம் துணை முதல்-மந்திரி அஜித்பவார், மாநில உள்துறை மந்திரி அனில்தேஷ்முக், சிறுபான்மை விவகாரத்துறை மந்திரி நவாப் மாலிக் மற்றும் முஸ்லிம் எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த 4 மாதங்களாக நாம் அனைத்து மத பண்டிகைகளையும் கட்டுப்பாடான முறையில் கொண்டாடி வருகிறோம். அதேபோல் வரவிருக்கும் பக்ரீத் பண்டிகையையும் எளிமையாக கொண்டாட வேண்டும். கொரோனா தொற்று பெரிய சவாலாக இருக்கிறது. பண்டிகையின் போது கூட்டங்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும். இந்த தொற்றுநோய் நெருக்கடியை திறம்பட சமாளித்து, அடுத்த ஆண்டு அனைத்து பண்டிகைகளையும் பெரிய அளவில் கொண்டாடுவோம். எனவே பக்ரீத் பண்டிகைக்காக ஆடுகளை விற்பனை செய்வதற்கு இடம் ஒதுக்க வேண்டும் என வற்புறுத்தக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News